தொழிற்பயிற்சி சான்றிதழில் திருத்தம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

தொழிற்பயிற்சி நிலைய தேசிய தொழிற் சான்றிதழ்களில் (NTC) திருத்தங்கள் மேற்கொள்ள பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: தொழிற்பயிற்சி நிலைய தேசிய தொழிற் சான்றிதழ்களில் (NTC) திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2014ஆம் ஆண்டு முதல் 2021 வரை பயின்ற பயிற்சியாளர்களின் தேசிய தொழிற் சான்றிதழ்களில் (NTC) பெயர், தந்தை பெயர், தாயின் பெயர், புகைப்படம், பிறந்ததேதி ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின் தாங்கள் பயின்ற தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் உரிய அசல் சான்றிதழ்களுடன் சென்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...