உடுமலை எஸ்.வி.புரம் பகுதியில் ஜனவரி மாத மின்கட்டணத்தையே மீண்டும் செலுத்த மின்துறை அறிவிப்பு!

உடுமலை எஸ்.வி.புரம் மற்றும் கொமரலிங்கம் பெருமாள் புதுார் மின் இணைப்புகளுக்கு நடப்பு மாத மின் கணக்கீடு செய்யாததால், ஜனவரி மாத தொகையை செலுத்துமாறு மின் வாரியம் அறிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எஸ்.வி.புரம் பகுதியில் மக்கள் ஜனவரி மாத மின் கட்டணத்தையே மீண்டும் செலுத்த மின்வாரியம் அறிவித்துள்ளது.



இதுகுறித்து உடுமலை கோட்ட செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை உட்கோட்டம், எஸ்.வி.புரம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட, எஸ்.வி.புரம் பகிர்மான மின் இணைப்புகளில், சுமார் 1,600 மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களால் 2023 மார்ச் மாதத்திற்கான மின் கணக்கீடு மேற்கொள்ள வில்லை.

ஆகவே, எஸ்.வி.புரம் மின் பகிர்மான நுகர்வோர், ஜனவரி மாதம் செலுத்திய தொகையையே, மார்ச் மாதத்திற்கும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதேபோல கொமரலிங்கம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, பெருமாள் புதுார் பகிர்மான மின் இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால், மார்ச் 2023 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.

ஆகவே, பெருமாள் புதுார் பகிர்மான மின் நுகர்வோர், கடந்த, ஜனவரி மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, மார்ச் மாதத்திற்கும் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...