கோவை மாவட்டத்தில் இ-சேவை மையம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!

கோவை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் இ சேவை மையம் அமைப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தனி நபர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர், பயோ-மெட்ரிக் சாதனங்கள், இணைய இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும் எனவும், குறைந்தபட்ச அடிப்படை வசதிகளான குடிநீர், பார்வையாளர்களுக்கான நாற்காலி, சாய்வு தளம், போன்ற மையத்துடன் கணினியில் பணிபுரியவும் தெரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள், www.tnesevai.tn.gov.in அல்லது www.tnega.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஏப்ரல் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கட்டணம் கிராமப்புறங்களுக்கு 3000 மற்றும் நகர்புறங்களுக்கு 6000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இ-சேவை மைய சேவைகளை மக்களுக்கு அருகாமையில், வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...