கோவை - அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் - போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!

கோவை-அவிநாசி சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், நேற்று (22.03.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை-அவிநாசி சாலையில் மேம்பாலப் பணிகளால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதி காலனி பகுதியிலிருந்து அவிநாசி செல்லும் வாகன ஓட்டிகள் அவிநாசி சாலையின் இடதுபுறமாக திரும்பி, பில்லர் எண் 183-184 இடையே U-Turn செய்து, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

நாகர்கோவில் ஆரிய பவன் ஒட்டல் எதிரில் உள்ள சாலை வழியாக- பாரதி காலனிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சுகுனா திருமண மண்டபத்திற்கு எதிரில் உள்ள, பில்லர் எண் 197-198 இடையே U-Turn செய்து தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது பயணத்தை திட்டமிட்டு, ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...