கோவை மாவட்டத்தில் 34 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி - ஆட்சியர் அறிவிப்பு

நீர்நிலைகளில் மண் எடுப்பதற்கு விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரிடம் நில உரிமைச்சான்று பெற்று விண்ணப்பத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். வறண்ட நஞ்சை நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டரும், புஞ்சை நிலத்தில் 90 கன மீட்டருக்கு மிகாமல் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: விவசாய பயன்பாட்டிற்காக 34 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 653 நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 27 நீர்நிலைகளும், மாநகராட்சி கட்டுப்பாட்டில் 9 நீர்நிலைகளும் என மொத்தம் 728 நீர் நிலைகள் உள்ளன.

ஒவ்வொரு வருடமும் மழைகாலம் தொடங்குவதற்கு முன்பு இக்குளங்கள் ஏரிகள் தூர்வாரப்பட்டு, அதில் உள்ள வண்டல் மண் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கிட அனுமதி அளிக்கப்படும்.

அதன்படி 2023ஆம் ஆண்டின் அரசிதழின்படி புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் ஆனைமலை வட்டத்தில் ஆழியார் அணை, குளப்பத்துக்குளம் எரி, பேரூர் வட்டத்தில் கங்கநாராயண சமுத்திர குளம், கொளராம்பதி குளம், புதுக்குளம், குனியமுத்துார் செங்குசம், பேரூர் பெரியகுளம், வெள்ளி மேடு குளம், உக்குளம், ஊத்துப்பள்ளம் தடுப்பணை, மதுக்கரை வட்டத்தில் வெள்ளலுார் குளம். எட்டிமடை குளம், கந்தன் குட்டை, மோதிரா குட்டை, செங்குட்டை, செட்டிபாளையம் குட்டை, காடுகுட்டை, உத்தாராண்டையார் கோவில் குட்டை, பெரியகுட்டைமாரப்பன் தோட்டம் அருகிலுள்ள குட்டை, சூலுார் வட்டத்தில் சூலுார் சின்னகுளம்கண்ணம்பாளையம் குளம் நீலம்பூர் குளம், இருகூர் குளம், ஒட்டர்பாளையம் குளம். செம்மாண்டம்பாளையம் குளம் அன்னூர் வட்டத்தில் சொக்கம்பாளையம், அக்ரஹாரசாமக்குளம், சர்க்கார் சாமக்குளம், ஆலம்பாளையம், குன்னத்தூராம் பாளையம் மயான குட்டை மோதன் குட்டை கவை காளியம்மன் கோவில் குட்டை வழங்கப்பட்டுள்ளது, என ஆக மொத்தம் 34 நீர்நிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை தூர்வாரி, அதிலுள்ள வண்டல் மண்ணை விவசாய நிலத்திற்கு பயன்படுத்துவதால், நீர்நிலைகளில் மழைநீர் சேமிப்புத்திறன் பாதுகாக்கப்படுவதாகவும் நிலச்சீரழிவு குறைகிறது எனவும், நிலத்தடிநீர் மேம்பாடு அதிகமாதல், மண் வளம் மேம்படுதல்,பயிர் உற்பத்தி திறன் மற்றும் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்குப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் அதற்கான விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்று கிராம நிர்வாக அலுவலரிடம் நில உரிமைச்சான்று பெற்று திரும்ப வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டுமெனவும் மற்றும் வறண்ட நஞ்சை நிலம் என்றால் ஒரு ஏக்கருக்கு 75 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கன மீட்டருக்கு மிகாமல் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...