கோவையில் 25ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் அறிவிப்பு

கோவையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மாவட்ட அளவில் நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

கோவையில், மாவட்ட அளவில் நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மாவட்ட அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து வட்டாரங்களில் வசிப்போர் அதிகளவில் பங்கேற்கும் பொருட்டு, பொள்ளாச்சி மெயின் ரோடு, மலுமிச்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள இந்துஸ்தான தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் வருகின்ற 25ஆம் தேதி காலை 9 முதல் 3மணிவரை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய 50க்கு மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களான information Technology, Automobile industries, Garments, Infrastructure, Marketing, Sales Associates, CNC Operator and Electrical போன்ற துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதால், 8ஆவது முதல் இளங்கலை மற்றும் முதுகலை தொழில்நுட்பக் கல்வி, பட்டப்படிப்பு பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள்(ஆண்கள் மற்றும் பெண்கள்)18 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் தவறாது கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, தன்குறிப்பு (BIO-DATA), புகைப்படம் மற்றும் இதர தகுதி சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்களுடன்) கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...