கோவையில் வரும் 19ம் தேதி என்ஐஎல்பி தேர்வு!

கோவையில் வரும் 19ம் தேதி புதிய இந்தியா எழுத்தறிவு திட்ட (என்ஐஎல்பி) தேர்வு நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் 20 ஆயிரத்து 995 பேர் தேர்வெழுதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் வரும் 19ம் தேதி புதிய இந்தியா எழுத்தறிவு திட்ட(என்ஐஎல்பி) தேர்வு நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் முறைசாரா மற்றும் முதியோர் கல்வி இயக்ககம் மூலம் 'புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க படிப்பறிவு இல்லாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் கற்பிக்கப்படுகிறது.

இம்முயற்சியின்படி கோவை மாவட்டத்தில் எழுத படிக்கத் தெரியாத சுமார் 20,995 கற்பவர்கள் கண்டறியப்பட்டு தன்னார்வலர்களின் உதவியுடன் கற்றல் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட கற்பவர்களுக்கு 6 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. 6 மாத பயிற்சி முடிந்ததும் அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய தேர்வு நடத்தப்படும்.

இந்நிலையில், கோவை மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும், முதல் முறையாக என்ஐஎல்பி தேர்வு நடத்தப்படுகிறது. பரீட்சை எதிர்வரும் 19ஆம் தேதி காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளதாகவும், இதில் 20 ஆயிரத்து 995பேர் தேர்வெழுதவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...