ஹோலி பண்டிகை - கோவையிலிருந்து பீகாருக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த ஊரில் ஹோலிப்பண்டிகை கொண்டாடும் வகையில், கோவையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஜவுளி தொழில்துறை, கட்டுமான நிறுவனங்கள், உணவகங்கள் என அனைத்து துறைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், ஹோலி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு ஏதுவாக போக்குவரத்து வசதிகள் செய்யப்படுகின்றன.



அதனடிப்படையில் பீகார் மாநில தொழிலாளிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து இன்றுஇரவு 8:45 மணிக்கு புறப்பட்ட ரயில், நாளை மறுதினம் 8 மணிக்கு பீகார் மாநிலம் பாட்னாவுக்கு செல்லவுள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாகஇயக்கப்படும் இந்த ரயிலில், மொத்தம் பத்து முன்பதிவு பெட்டிகளும், 8 முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், வடமாநில தொழிலாளர்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...