சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர், உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் ஆகிய பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு ரூ.27,804, உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவருக்கு ரூ.13,240ம் மாத ஊதியம் வழங்கப்படும்.

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. முடித்திருக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் உரிமை தொடர்பாக அரசு, அரசு சாரா நிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 2023 மார்ச் 15ஆம் தேதி அன்று 40 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும்.

உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்துக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் முதுநிலை தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் 2023 மார்ச் 15ஆம் தேதியன்று 40 வயதுக்கு உள்பட்டவராக இருத்தல் வேண்டும். எனவே, மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் மார்ச் 15 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...