கோவை வழியாக செல்லும் 4 ரயில்களின் சேவை ரத்து - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களிடையே நடைபெறும் ரயில் பாதை அமைக்கும் பணிகளையொட்டி, கோவை வழியாக அம்மாநிலங்களுக்கு இயக்கப்பட்டுவந்த 4 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.


கோவை: மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் இடையே மூன்றாவது ரயில் பாதை அமைப்பதற்கான இன்ஜினியரிங் பணிகள் நடக்க உள்ளன. இதையடுத்து, கோவை வழியாக செல்லும் சந்திரகாஞ்சி - மங்களூரு விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22851), இன்றும், வரும் 2ம் தேதியும் ரத்து செய்யப்பட்டுளளது.

மறுமார்க்கத்தில் மங்களூரு - சந்திரகாஞ்சி இடையேயான விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22852) வரும் 25, மற்றும் மார்ச் 4ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், திப்ருகர் - கன்னியாகுமரி இடையே வாரத்தில் இருமுறை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் (எண்:15906) ரயில், வரும் 25 மற்றும், 28ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில், கன்னியாகுமரி - திப்ருகர் இடையே வாரத்தில் இரு முறை இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:15905) மார்ச் 2 மற்றும், 5ம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...