கோவைக்கு குடியரசுத் தலைவர் வருகை - பிப்.18, 19ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்!

கோவை ஈஷா மையத்தில் நடைபெறவுள்ள சிவராத்திரி விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரவுள்ளதையொட்டி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கோவை ஈஷா யோகா மையத்தில் நாளை சிவராத்திரி விழா நடைபெறுகிறது. இதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக அவர் கோவை வரவுள்ளதையொட்டி, நாளை (சனிக்கிழமை) மதியம் 1:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அவிநாசியிலிருந்து, கோவை நகருக்குள் சின்னியம்பாளையம் வழியாக கனரக வாகனங்கள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் எல் அண்டி டி பைபாஸ் ரோடு, சிந்தாமணிப்புதூர், ராமநாதபுரம் வழியாக நகருக்குள் வரலாம்.

கோவை நகரிலிருந்து, அவிநாசி ரோட்டில் செல்லும் கனரக வாகனங்கள் அண்ணா சிலை, சுங்கம், சிங்காநல்லுார், எல் அண்டி டி பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம். காளப்பட்டி ரோடு வழியாக, நகருக்கு வெளியே செல்லும் கனரக, சரக்கு வாகனங்கள் விமான நிலைய சந்திப்புக்கு செல்ல அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றாக, அந்த வாகனங்கள் அனைத்தும் காளப்பட்டி நால்ரோடு வழியாக செல்லலாம். சத்தி ரோடு, சரவணம்பட்டி பகுதிகளிலிருந்து, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு செல்லும் கனரக வாகனங்கள் கணபதி, காந்திபுரம் மேம்பாலம், ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லுார் வழியாக செல்லலாம். மருதமலை ரோடு, தடாகம் ரோடு வழியாக வரும் வாகனங்கள் கவுலிபிரவுன் ரோடு, சிந்தாமணி வழியாக செல்ல தடை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக, ஜி.சி.டி., பாரதி பார்க் ரோடு, வடகோவை மேம்பாலம், காந்திபுரம், ரேஸ்கோர்ஸ், சுங்கம், சிங்காநல்லுார் அந்த வாகனங்கள் வழியாகசெல்லலாம். கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தங்களது பயணத்தை மாற்றி திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்றும், விமானநிலையம், ரயில்நிலையம், மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே தொட்டிபாளையம் பிரிவிலிருந்து நகருக்குள் அனுமதிக்கப்படும் என்றும் கோவை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...