தாராபுரத்தில் தடுப்பணையில் முதலை - பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

தாராபுரம்-அலங்கிய சாலையில் உள்ள சீத்தக்காடு மற்றும் தாளக்கரை பகுதி வழியாக செல்லும் அமராவதி ஆற்றிலும், நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் தடுப்பணையிலும் முதலைகள் நடமாட்டம் உள்ளதாக நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை பலகை வைத்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


திருப்பூர்: சீத்தக்காடு பகுதியில் உள்ள அமராவதி தடுப்பணையில்,பொதுமக்கள் தினசரி குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் வைத்துள்ள எச்சரிக்கை பலகையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையிலிருந்து உடுமலை, தாராபுரம், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள நிலங்களுக்குப் பாசன வசதியை கொடுப்பதோடு, கரூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் இணைகிறது.

பழைமை வாய்ந்த அமராவதி ஆற்றில் சீத்தக்காடு பகுதியில் உள்ள தடுப்பணையில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தினசரி குளிப்பதும், பெண்கள் துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 6 மாத காலமாக அமராவதி ஆற்றில் முதலைகள் இருப்பதாக ஒரு சிலர் கூறிவந்த நிலையில் திடீரென சுமார் 10 அடி நீளமுள்ள முதலை ஒன்று அடிக்கடி பாறை மீது ஏறி ஓய்வெடுத்து வந்ததைச் சிலர் வாட்ஸ் ஆப்பிலும், சமூக வலைத் தளத்திலும் பதிவேற்றம் செய்து வந்தனர்.

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்வதைத் தவிர்த்து உள்ளனர். இந்நிலையில் தாராபுரம் அடுத்த தாளக்கரை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆற்றிற்குத் துணி துவைக்கச் சென்றார். அப்போது அமராவதி ஆற்றில் சுமார் 8,அடி நீளம் கொண்ட முதலை ஒன்று தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்தது.

அந்த பெண் உடனே தனது கையில் வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்தார்.பிறகு அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நகராட்சி பகுதிக்குக் குடிநீர் வழங்கும் நீர் உந்தும் தடுப்பணை இடத்திலும் முதலை தென்பட்டதால், நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. முதலைகளைப் பிடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...