கோவை மாநகராட்சியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் வெள்ளியங்காடு குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலைய குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால் நாளை சரிசெய்யும் பணி நடைபெறவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


கோவை: குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சிங்காநல்லூர்‌, ஒண்டிபுதூர்‌, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும்‌ பில்லூர்‌ குடிநீர் திட்டம்‌ II-ல்‌ வெள்ளியங்காடு குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையம்‌ முதல்‌ ராமகிருஷ்ணாபுரம்‌ மேல்நிலைத்தொட்டி வரை உள்ள குடிநீர்‌ கொண்டு வரும்‌ பிரதான குழாயில்‌ முத்துக்கல்லூர் என்ற இடத்தில்‌ நீர் கசிவு ஏற்பட்டுள்ளதால்‌ அதனை சரி செய்யும்‌ பணி நாளை நடைபெறுகிறது.

இதனால்‌, பில்லூர்‌ திட்டம்‌ II-ன்‌ மூலம்‌ குடிநீர் விநியோகிக்கப்படும்‌ சிங்காநல்லூர்‌, ஒண்டிபுதூர்‌, பீளமேடு, செளரிபாளையம்‌, கணபதி, காந்திபுரம்‌, புலியகுளம்‌, ரத்‌தினபுரி, சித்தாபுதூர்‌ மற்றும்‌ உக்கடம்‌ ஆகிய பகுதிகளில்‌ குடிநீர்‌ விநியோகம்‌ இருக்காது.

எனவே பொதுமக்கள்‌ சிரமத்தினை பொறுத்து, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...