உடுமலை துணை மின்நிலையம் பகுதியில் நாளை மின்தடை

உடுமலை துணை மின்நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரியம் தகவல்.



திருப்பூர்: உடுமலை நகரம், பழனி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல் பாவி, சுண்டக்காம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை துணை மின்நிலைய பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உடுமலை நகரம், பழனி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல் பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர் வேலூர், கணபதிபாளையம், வெனசப்பட்டி, தொட்டம்பட்டி, ஏரி பாளையம், புக்குளம், குறுஞ்சேரி, சின்ன வீரன் பட்டி, சங்கர் நகர், காந்திநகர் 2, சிந்துநகர், ஸ்ரீராம் நகர், ஜீவா நகர், அரசு கலைக் கல்லூரி பகுதி, போடி பட்டி, பள்ளபாளையம், குறிச்சிக்கோட்டை, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உடுமலை செயற்பொறியாளர் மூர்த்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...