தாராபுரம் மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் இன்று மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மூலனூர், கன்னிவாடி கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டதால், காலை 9 மணி முதல் 2 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் மின் பகிர்மான வட்டம் தாராபுரம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மூலனூர் கன்னிவாடி கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரிய செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மூலனூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான அக்கரைபாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, நொச்சிக்காட்டு வலசு, வேங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகப்பட்டி, இலக்கம நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது.

அதேபோல், கன்னிவாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மாலமேடு, அரிக்காரன் வலசு, ஆய்கவுண்டன் பாளையம், கன்னிவாடி, நஞ்சத்தலையூர், புஞ்ச தலையூர், மணலூர், பெருமாள் வலசு பகுதிகள்.

கொளத்துப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கொழிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், ஆட்சியூர், மனக்கடவு, கரையூர், சாலக்கடை, ராமமூர்த்தி நகர், கொளத்துப்பாளையம், ராமபட்டினம், மாரியம்மன் கோவில், அனுமந்தபுரம் பகுதிகளிலும் இன்று மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...