கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் இறைச்சி விற்பனை செய்ய தடை!

பிப்.5 ஆம் தேதி வள்ளலார்‌ இராமலிங்க அடிகளார்‌ நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு மற்றும்‌ கோழிகளை வதை செய்வதற்கும்‌, இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும்‌ தடை விதிப்பு.


கோவை: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, இறைச்சி விற்பனை செய்ய மாநகராட்சி தடை விதித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ பிப்.5 ஆம் தேதி வள்ளலார்‌ இராமலிங்க அடிகளார்‌ நினைவு தினத்தை முன்னிட்டு ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும்‌ பன்றி இறைச்சிக் கடைகளை மூடும்படி இதன்‌ மூலம்‌ தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியால்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ உக்கடம்‌, சக்தி ரோடு, போத்தனூர்‌, அறுவை மனைகள்‌ மற்றும்‌ துடியலூர்‌ மாநகராட்சி இறைச்சிக் கடைகள்‌ செயல்படாது எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர்‌ மீது மாநகராட்சி அதிகாரிகளால்‌ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...