கோவை மாவட்டத்தில் 5ஆம் தேதி மதுபானக்கடைகளை மூட வேண்டும்..! - மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு

வடலூர் இராமலிங்க அடிகள் நினைவு தினத்தையொட்டி வரும் 5-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை மூடும்படி மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு.


கோவை: வடலூர் இராமலிங்க அடிகள் நினைவு தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் வரும் 5ஆம் தேதி மதுபானக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 5ம் தேதி வடலூர் இராமலிங்க அடிகள் நினைவு தினத்தையொட்டி Dry Day ஆக கடைப்பிடிக்கப்படுவதால் மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபான கடைகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மது கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுகூடம் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல் நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...