கோவை மாநகராட்சியில் வரிவசூல் பணி தீவிரம் - ஆணையாளர் பிரதாப் தகவல்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் சொத்துவரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம்‌ மற்றும்‌ பாதாளச் சாக்கடை கட்டணம்‌ முதலிய நிலுவை தொகைகளை வசூல்‌ செய்யும்‌ பணி தீவிரம்.


கோவை: நடப்பு 2022-23ம்‌ நிதியாண்டு முடிவிற்குள்‌ 100% வரிவசூல்‌ இலக்கினை எட்டும்‌ பொருட்டு வரிவசூல் செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்கு நடப்பு 2022-23ம்‌ நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டு வரையிலான காலத்திற்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம்‌ மற்றும்‌ பாதாளச் சாக்கடை கட்டணம்‌ முதலிய நிலுவைகளை வசூல்‌ செய்யும்‌ பணிகள்‌ தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும்‌, நடப்பு 2022-23ம்‌ நிதியாண்டு முடிவிற்குள்‌ 100% வரிவசூல்‌ இலக்கினை எட்டும்‌ பொருட்டு, ரூ.67.88 லட்சம்‌ சொத்துவரி நிலுவைக்காக 8 குடிநீர் இணைப்புகளும், ரூ.9.98 லட்சம்‌ சொத்துவரி நிலுவைக்காக ஒரு பாதாளச் சாக்கடை இணைப்பும்‌ மற்றும்‌ ரூ.4.30 லட்சம்‌ நிலுவைக்காக 11 கட்டிடங்கள்‌ பூட்டி சீல்‌ வைக்கப்பட்டும்‌ உள்ளது.

மேலும்‌, 152 கட்டிடங்களைப்‌ பூட்டி சீல்‌ வைத்த பின்னர் ரூ.3.05 லட்சம்‌ மாநகராட்சியால்‌ சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும்‌ கட்டிடங்கள்‌ பூட்டி சீல்‌ வைக்கும்‌ நடவடிக்கைகளை தவிர்க்குமாறு பொதுமக்களை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...