கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் திடீர் பணியிடமாற்றம்

கோவை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த சமீரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கிராந்தி குமார் பாடி அறிவிக்கப்பட்டுள்ளார்.


கோவை: தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர்கள் சிலர் மாநகராட்சி ஆணையாளர்களாகவும், மாநகராட்சி ஆணையாளர்கள் மாவட்ட ஆட்சியர்களாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியராக தற்போது இருக்கும் ஜி.எஸ்.சமீரன் சென்னை மாநகராட்சி ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக உள்ள கிராந்தி குமார் பாடி கோவை மாவட்ட ஆட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் அவர் கோவை மாவட்ட ஆட்சியராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...