கோவை, புரூக் பீல்ட் சாலையில் போக்குவரத்து மாற்றம் - மாநகர போலீசார் அறிவிப்பு…!

கோவை புரூக் பீல்ட் சாலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காகக் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காகவும் போக்குவரத்து மாற்றம்.


கோவை: கோவை புரூக் பீல்ட் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை, புரூக் பீல்ட் சாலையில், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவின் சோதனை முயற்சியாக, கோட்டப் பொறியாளர் சாலை பாதுகாப்பு, மனுநீதி மற்றும் அந்த பிரிவைச் சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து, இன்று மாலை 4.00 மணிமுதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புரூக் பீல்ட் வாகனங்கள் சாலையிலிருந்து, தேவாங்கபேட்டை சிக்னலில், செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, வலதுபுறம் புரூக் பீல்ட் ரோட்டிலிருந்து, பூ-மார்கெட், R.S.புரம், சிந்தாமணி, காந்திபுரம், மேட்டுப்பாளையம் செல்லும் வாகன ஒட்டிகள், தேவாங்கபேட்டை சிக்னலில், வலதுபுறமாகத் திரும்பாமல் நேராகச் சென்று, சிரியன் சர்ச் ரோட்டில், வலதுபுறம் திரும்பி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

அதேபோல், புரூக் பீல்ட் சாலை வழியாக, நேராக அவினாசி சாலை, பழைய மேம்பாலத்திற்குச் செல்லும் வாகன ஓட்டிகள், தேவாங்கபேட்டை சிக்னலுக்காக காத்திருக்காமல், தொடர்ந்து பயணம் செய்யலாம்.

தேவாங்கபேட்டை சாலை மற்றும் அவினாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகள் வழக்கம்போல் தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். அவர்களுக்கு எந்தவிதமான போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, பொது மக்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...