திருப்பூர் தாராபுரத்தில் நாளை மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகளுக்காக நாளை (ஜன.21) மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் பாலன் அறிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்அணை, பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தாராபுரம் மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ. பாலன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...