கோவையில் திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சிக் கடைகளுக்குத் தடை

கோவையில் திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும்‌ பன்றி இறைச்சிக் கடைகளைத் திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில் திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 16ஆம் தேதி திருவள்ளுவர்‌ தினம்‌ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்‌ தமிழக அரசால்‌ ஆடு, மாடு மற்றும்‌ கோழிகளை வதை செய்வதற்கும்‌, இறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும்‌ பன்றி இறைச்சிக் கடைகளைத் திறக்கக் கூடாது. இதேபோல், உக்கடம்‌, சக்தி ரோடு, போத்தனூர்‌ அறுவைமனை மற்றும்‌ துடியலூர் à®ªà®•ுதியில் மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் இறைச்சிக் கடைகளும் செயல்படாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த உத்தரவை மீறிச் செயல்படுவோர்‌ மீது மாநகராட்சி அதிகாரிகளால்‌ கடமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என à®®à®¾à®¨à®•ராட்சி ஆணையர் à®…றிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...