சாலைகளில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம்; கட்டத்தவறினால் மாடுகள் ஏலம் விடப்படும் - கோவை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

முதல் தடவை பிடிப்பட்ட மாட்டின் உரிமையாளர் ரூ.10,000 அபராதம் செலுத்தி மாட்டை அழைத்து செல்லலாம். அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் பிடிப்பட்ட மாடுகள் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு குற்றவியல் நடவடிக்கை பாயும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.



கோவை: சாலைகளில் மாடுகளை திரியவிடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை பாயும் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் எச்சரித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் மாடுகளை வளர்ப்பவர்கள் அவற்றை சாலைகளில் சுற்றித்திரிய விடுவதால் விபத்து மற்றும் பல்வேறு இடஞ்சல்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சந்தித்து வருகின்றனர்.



அவ்வாறு சாலைகளில் சுற்றித் தெரியும் மாடுகள், வாகன போக்குவரத்தை பாதிக்கும்படி சாலைகளில் படுத்துக்கொள்வது, குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை இழுத்து போட்டு உண்பது என்று பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.



குறிப்பாக, வாகன ஓட்டிகள், சற்றும் எதிர்பாராத நேரத்தில், சாலையில் குறுக்கே ஓடுவது, சண்டையிட்டு கொண்டு வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்துவதாக எழும் தொடர் புகார்களையடுத்து, மாநகராட்சி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட சாலைகளில் மாடுகளை சுற்ற விடும் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் பிடிபட்ட மாடுகள் ஏலம் விடப்பட்டு அத்தொகை மாநகராட்சி கரூவூலத்தில் செலுத்தப்படும், என கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்களிடமிருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

இதை தவிர்க்கும் பொருட்டு தெரு மற்றும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்கும் பணியானது மாநகராட்சி வாகன மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு, முதல் தடவை பிடிப்பட்ட மாட்டின் உரிமையாளர் பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி மாட்டை அழைத்து செல்லலாம். அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் பிடிப்பட்ட மாடுகள் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு அத்தொகை மாநகராட்சி கரூவூலத்தில் செலுத்தப்படும்.

மேலும், பிடிப்பட்ட மாடுகள் மீண்டும் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றினால் மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...