கோவையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடல் - வனத்துறை அறிவிப்பு

கோவையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை சார்பில் தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் நேற்றைய தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

இதன் காரணமாக கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. இந்நிலையில் கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் மழையின் காரணமாக வழக்கத்தை விட நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் இரு நாட்களுக்கு மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

தேதி குறிப்பிடாமல் மூடப்படுள்ளதால் மழை குறைந்து நீர்வரத்து வழக்கத்தை எட்டும் வரை மூடப்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...