கோவை மாநகரில் தார் சாலை அமைக்கும் பணி - இன்றும் நாளையும் இரவு நேரங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை அறிவிப்பு..!

கோவை ரேஸ்கோர்ஸ் - பிக் பஜார் ரவுண்டானா இடையே சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு இரவு 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ரேஸ்கோர்ஸ் - பிக் பஜார் ரவுண்டானா இடையே சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்றும், நாளையும் இரவு 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் - பிக் பஜார் ரவுண்டானா à®šà®¾à®²à¯ˆà®¯à®¿à®²à¯ இன்று (8.12.2022) மற்றும் நாளை (9.12.2022) இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி சாலையில் வரும் வாகனங்கள் சாவித்திரி சண்முகம் சாலை, கிளாசிக் டவர், அரசு மருத்துவமனை, ரயில்வே நிலையம், - வழியாக அவினாசி ரோடு சென்றடைய வேண்டும்.

அதேபோல், தாமஸ் பார்க்கிலிருந்து சாவித்திரி சண்முகம் ரோட்டில் செல்லாமல் ஸ்கீம் சாலை, காஸ்மோ பாலிடன் கிளப் - வழியாக சென்று அவினாசி சாலை சென்றடையலாம்.

மேலும், திருச்சி சாலையிலிருந்து பிக் பஜார் சாலை வழியாக ரேஸ்கோர்ஸ் செல்லும் வாகனங்கள், நிர்மலா கல்லூரி வழியாக அப்துல் ரஹீம் ரோடு சென்று தாமஸ் பார்க் வழியாக ரேஸ்கோர்ஸை அடைய வேண்டும்.

இதேபோல், செஞ்சிலுவை சங்கம் & கே.ஜி சந்திப்பிலிருந்து ஈஸ்ட் கிளப் சாலை வழியாக திருச்சி சாலை செல்லும் வாகனங்கள் சூர்யா ரவுண்டானா காஸ்மோ பாலிடன் கிளப், தாமஸ் பார்க், அப்துல் ரஹீம் சாலை சென்று நிர்மலா கல்லூரி சாலை வழியாகவோ அல்லது புலியகுளம் சென்று ராமநாதபுரம் - திருச்சி சாலை சந்திப்பு செல்ல வேண்டும்.

பொதுமக்கள் மேலே கூறப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கோவை மாநகர காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...