மாணவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க சிறப்புத் திட்டம் அறிமுகம்

மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ்.சசிகுமார் மாணவர்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பிக்க சிறப்புத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளார்.

பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் மாணவர்களுக்கு சேவைபுரியும் வகையில் மாணவர்கள் இணைப்பு என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் கல்லூரி மூலமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்:-

1. www.passportindia.gov.in à®Žà®©à¯à®± இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.

2. அதில், புதிய பயனாளராக பதிவு செய்ய வேண்டும்.

3. இணையத்திலேயே வரும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவிரக்கம் செய்ய வேண்டும். அல்லது விண்ணப்பத்தினை தரவிரக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து பின் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4. பின், இணையதளத்தின் மூலமாகவே விண்ணப்பத்திற்கான தொகையினை செலுத்த வேண்டும். அல்லது வங்கி மூலமாக விண்ணப்பத் தொகையினை செலுத்த வேண்டும்.

5. பின், அந்த இணையதள பக்கத்திலேயே நேர்முகத் தேர்விற்கான நாள், நேரம் மற்றும் பாஸ்போர்ட் நேரடி ஆய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

6. அதில் உள்ள நாள், நேரத்தில் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தங்களது சான்றிதழ்களில் உண்மை மற்றும் நகலினை எடுத்துச் செல்ல வேண்டும். 

இதுகுறித்த மேலும் தகவலுக்கு www.passportindia.gov.in à®Žà®©à¯à®± இணையதள முகவரியிலோ, 1800 258 1800 என்ற தொலைபேசி எண்ணிலோ அனுகி பயனடையலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...