கோவையில் புனரமைக்கப்பட்ட குளங்களில் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை அனுமதியின்றி எடுக்க தடை

கோவையில் புனரமைக்கப்பட்ட குளங்களில் திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளை உரிய அனுமதியின்றி எடுக்க மாநகராட்சி ஆணையாளர் தடை விதித்துள்ள நிலையில், மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி சீர்மிகு திட்டத்தின்கீழ்‌ வாலாங்குளம்‌, உக்கடம்‌ பெரியகுளம்‌, குறிச்சி குளம்‌, முத்தண்ணன்‌ குளம்‌, செல்வசிந்தாமணி குளம்‌, ஆகிய குளங்கள் அண்மையில் புனரமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குளங்களில் சினிமா, சின்னத்திரை நாடகங்களின் படப்பிடிப்புகள், குறும்படம், அவுட்டோர்‌ புகைப்படங்கள்‌ எடுத்தல்‌ உள்ளிட்டவற்றை மாநகராட்சியின்‌ உரிய அனுமதியின்றி எடுக்க தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட செயல்களில்‌ ஈடுபடுபவர்களுக்கு அபராதம்‌ விதிக்கப்படுவதுடன்‌, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...