துரிதமின் இணைப்பிற்கு ஆதிதிராவிடர் மக்கள் விண்ணப்பிக்கலாம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

துரிதமின் இணைப்பிற்கு அரசின் மானியமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் நிலையில் ஆதிதிராவிடர் மக்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.


கோவை: துரித மின் இணைப்புபெறும் ஆதிதிராவிடர் விவசாயிகள் தங்கள் நிலங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்ய கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

நடப்பு 2022-2023ம் ஆண்டில் ஆதிதிராவிடர்களுக்கான துரித மின் இணைப்புத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் உயர்த்தப்பட்ட மின் இணைப்புக் கட்டணத்திற்காக, விவசாய நிலம் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் பயனடையும் வகையில் 90% மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரருக்கு 0.50 சென்ட் நிலம் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருத்தல் வேண்டும்.

நிலத்திற்கு 20 மீட்டர் தூரம் வரை ஆறு இல்லை என்பதை உறுதி செய்தல், 100 மீட்டர் தூரம் வரைபொது Overhead Tank இல்லை என்பதை ஊராட்சி மன்றத் தலைவரிடம் சான்று பெறுதல் வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் நிலத்தில் போர்வெல் அல்லது திறந்தவெளி கிணறு இருத்தல் வேண்டும். நிலத்தின் பட்டா விண்ணப்பதாரர் பெயரில் இருத்தல் வேண்டும் அல்லது கூட்டுபட்டா எனில் பிற கூட்டாளிகளின் தடையில்லாச் சான்று பெறப்படுதல் வேண்டும்.

அரசுமானியத்தில் துரித மின் இணைப்புபெறும் ஆதிதிராவிடர் விவசாயிகள் தங்கள் நிலங்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விற்பனை செய்தல் கூடாது என்றும் பயனாளி 10% பங்குத் தொகையாக 27 ஆயிரத்து 500 ரூபாயை தாட்கோ நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் அரசின் மானியமாக அதிகபட்சமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுவதாகவும் எனவே தகுதியான விவசாய நிலம் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் இத்திட்டத்தின் கீழ் www.application.tahdco.com என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...