கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் செல்ல தடை..!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுற்றுலா செல்ல மறு அறிவிப்பு வரும்வரை வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.



கோவை: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றிலும் நீர் ஆர்பரித்து செல்கிறது.

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு



மேலும், இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, என்று மாவட்ட வனத்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



மேலும், குற்றாலத்திற்கு செல்லும் சாலையின் நுழைவு வாயிலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்லவும் தடை போடப்பட்டுள்ளது. இன்று சுற்றுலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அறியாமல் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...