கோவையில் சிறுபான்மையின ஏழை கைத்தறி மற்றும் கலைஞர்களுக்கான புதிய கடனுதவி திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

கோவையில் அறிவிக்கப்பட்டுள்ள சிறுபான்மையின ஏழை கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களுக்கான கடனுதவி திட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகரகூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: சிறுபான்மையின ஏழை கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களுக்கு VIRASAT என்ற பெயரில் குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடனுதவி திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்:-

"கோயம்புத்தூர் மாவட்டத்தி்ல் உள்ள சிறுபான்மையின ஏழை கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களுக்கு தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி நிதிக் கழகம் (NMDFC) தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலமாக மூலப்பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக VIRASAT என்ற பெயரில் குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடனுதவி திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டங்களுக்கான கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி தேவைப்படும் சிறுபான்மையின கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/- க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் ஆண்கள் கைவினை. கலைஞர்களுக்கு 5% வட்டி விகிதமும் பெண் கைவினை கலைஞர்களுக்கு 4% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.

எனவே, கோவை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையின கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்கள் (கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கியர், புத்தர், பார்சி மற்றும் ஜெயின்) இத்திட்டத்தின் கீழ் கடன் பெற உரிய ஆவணங்களான சாதிச்சான்று, புகைப்படம், ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் திட்ட அறிக்கை, ஆகியவற்றுடன் கூட்டுறவு வங்கிகள் கோரும் இதர ஆவணங்களுடன் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகரகூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...