ஸ்வச்‌ டாய்காத்தான் போட்டியில் பங்கேற்போர் நவ.11 வரை விண்ணப்பிக்கலாம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தகவல்

பொம்மை தொழிலை மறுபரிசீலனை செய்யும் நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஸ்வச்‌ டாய்காத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார்.



கோவை: மத்திய நகர்ப்புற மற்றும்‌ வீட்டு வசதி அமைச்சகத்தின்‌ மூலம்‌ தூய்மை பாரத திட்டத்தின்கீழ்‌ இந்திய பொம்மை தொழிலை மறுபரிசீலனை செய்யும்‌ நோக்கத்துடன்‌ “ஸ்வச்‌ டாய்காத்தான் எனும்‌ விளையாட்டு போட்டி ஏற்படுத்தப்பட்டது. அனைத்து வயதினரும்‌ கலந்து கொள்ளும்‌ இப்போட்டியானது பொம்மை வடிவமைப்பில்‌ ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வருவதை முக்கிய நோக்கமாகக்‌ கொண்டுள்ளது.

இந்த போட்டியானது கழிவு மற்றும்‌ மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப்‌ பயன்படுத்தி பொம்மைகள்‌, விளையாட்டு வடிவமைப்புகள்‌ மற்றும்‌ பொம்மை தொழிலை மறுபரிசீலனை செய்யும்‌ பிற புதுமையான யோசனைகள்‌ ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்‌.

இந்நிலையில் இப்போட்டியில்‌ பங்கேற்பவர்கள் தனிநபர்களாகவோ, குழுக்களாகவோ இருக்கலாம் என்று கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்‌ தெரிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் http://innovateindia.mygov.in/swachh-toycathon என்ற இணையதள முகவரி மூலம் வரும் நவம்பர்‌ 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

1)வேடிக்கை & கற்றுக்கொள்ளுங்கள்‌, 2) பயன்படுத்தவும்‌ அனுபவிக்கவும்‌, 3) பழையதிலிருந்து புதியது ஆகிய மூன்று கருப்பொருள்களிலும்‌ தலா ஓரு பதிவை விண்ணப்பதாரர்கள் சமாப்பிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

தாங்கள்‌ உருவாக்கிய தீர்வுகளின்‌ புகைப்படங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில்‌ நவம்பர்‌ 11-ம்‌ தேதிக்குள்‌ பதிவேற்றம்‌ செய்து சமர்ப்பிக்கலாம் என்றும் இது தொடா்பான தகவல்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல்‌ முகவரியை தொடா்பு கொள்ளலாம்‌ எனவும் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...