வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் அனைத்து பொதுமக்களும் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு, இதுநாள் வரை ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைக்காமல் இருக்கும் பொதுமக்கள் வங்கிக் கணக்கில் இணைக்க ஏதுவாக வருகிற நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை அனைத்து தாலுகா மற்றும் வட்டாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

அனைத்துத் துறை அலுவலர்கள், வங்கியாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும், ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ரூபே டெபிட் கார்டு பெறாதவர்களும் இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பித்து பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர்  à®µà¯†à®³à®¿à®¯à®¿à®Ÿà¯à®Ÿà¯à®³à¯à®³ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...