கோவை வரும் மதுரை, ஷொரனூா் ரெயில்கள் போத்தனூரை வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படும் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

கோவை - போத்தனூா் இடையே நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஷொரனூா் ரெயில்கள் 15-ந் தேதி வரை போத்தனூா் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.


கோவை: கோவை- போத்தனூா் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக தினமும் மதியம் 12.45 மணிக்கு கோவை ரெயில் நிலையம் வந்தடையும் மதுரை - கோவை தினசரி ரெயில் (எண்: 16722)நாளை (31-ந் தேதி) முதல் நவம்பா் 15-ந் தேதி வரை மதுரை - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது.

இது குறித்து சேலம் ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:-

தினமும் காலை 11.10 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடையும் ஷொரனூா் - கோவை ரெயில் (எண்: 06458) நவம்பா் 15-ந் தேதி வரை ஷொரனூா்- போத்தனூா் இடையே மட்டுமே இயக்கப்படும்.

போத்தனூா்- கோவை இடையே இயக்கப்படாது. இதேபோன்று, கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) (31-ந் தேதி) முதல் நவம்பா் 15-ந் தேதி வரை கோவை ரெயில் நிலையம் வழியாக இயக்கப்படாமல் போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும்.

ஈரோட்டில் ரெயில் பாதையில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - சேலம் ரெயில் (31-ந் தேதி) முதல் நவம்பா் 29-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. கோவையில் இருந்து காலை 9.05 மணிக்குப் புறப்படும் கோவை - சேலம் ரெயில் (எண்: 06802) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்குப் புறப்படும் சேலம் - கோவை ரெயில் (எண்: 06803) அக்டோபா் 31-ந் தேதி முதல் நவம்பா் 29-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...