கோவையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் வீடுகளுக்கு தனிநபர் கழிவறை கட்டித்தரப்படும் - மாநகராட்சி ஆணையர் பிரதாப்

கோவையில் தூய்மை பாரத இயக்கம்‌ சார்பில்‌ தனிநபர்‌ கழிப்பிடம்‌ இல்லாத வீடுகளுக்கு பொது மக்களிடம்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு கழிப்பிடங்கள்‌ கட்டித்தரப்படும்‌ என ஆணையர் பிரதாப் தகவல்.



கோவை: கோவையில் தூய்மை பாரத இயக்கம்‌ சார்பில்‌ தனிநபர்‌ கழிப்பிடம்‌ இல்லாத வீடுகளுக்கு பொது மக்களிடம்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு கழிப்பிடங்கள்‌ கட்டித்தரப்படும்‌ என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை‌ மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ மத்திய மற்றும்‌ மாநில அரசின்‌ நிதியின்‌ மூலம்‌ தனிநபர்‌ கழிப்பிடம்‌ (பிரிட்‌ இல்லாத வீடுகளுக்கு) தூய்மைபாரத திட்டத்தின் கீழ்‌ கழிப்பிடம்‌ கட்டித்தருவதற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

இதற்காக மத்திய அரசின்‌ மானியமாக ரூ.4,000, மாநில அரசின்‌ மானியமாக ரூ.2,667 மற்றும் நகராட்சி பங்குத்‌ தொகையாக ரூ.2,667 என நிதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கழிப்பிடம் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள்‌ தங்கள்‌ விண்ணப்பங்களை அந்தந்த மண்டலங்களில்‌ உள்ள சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகங்களில்‌ சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...