நாளை 27 ஆம் தேதி சிட்கோ, சுந்தராபுரம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை குறிச்சி மற்றும் பட்டணம் துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி முதல் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பட்டணம் துணை மின் நிலையம் மற்றும் குறிச்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

குறிச்சி துணை மின் நிலையம்

சிட்கோ, சுந்தராபுரம், மதுக்கரை, ஈச்சனாரி, குறிச்சி, எல்.ஐ.சி., காலனி, ஹவுசிங் யூனிட் மற்றும் மலுமிச்சம்பட்டி ஒருபகுதி ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (அக் 27 ஆம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குனியமுத்துார் செயற்பொறியாளர், ரமேஷ் தெரிவித்துள்ளார்.

பட்டணம் துணை மின் நிலையம்

பட்டணம் புதுார், பீடம்பள்ளி ஒரு பகுதி, சத்யநாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலுார் ஒரு பகுதி பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம் பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அருள்செல்வி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...