கோவை மகளிர் நலவாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆதரவற்ற பெண்களின் வாழ்வை பாதுகாக்கும் வகையில் மகளிர் நலவாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.



கோவை: மகளிர் நலவாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து

அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளாக கல்வி, தொழிற்பயிற்சி வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல் இதன் நோக்கம்.

அதன்படி கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் அலுவல்சாரா உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், à®ªà¯†à®£à¯ தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்களை தேர்ந்தெடுக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த நபர்கள் பின்வரும் முகவரியில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பங்களை நவம்பர் 4ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி:-

மாவட்ட சமூகநல அலுவலர்,

மாவட்ட சமூக நல அலுவலகம்,

பழைய கட்டிடம் (தரைத்தளம்),

அறை எண் - 5,

மாவட்ட ஆட்சியரகம்,

கோயமுத்தூர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...