கோவையில் இன்று முதல் புதிய சொத்து வரிவிதிப்புக்‌ கோரும்‌ விண்ணப்பங்கள் பெறப்படும் - மாநகராட்சி ஆணையாளர்‌ தகவல்

சொத்துவரி பொதுச்‌ சீராய்வுப்‌ பணிகள்‌ முடிவுற்றதால்‌ இன்று முதல்‌ பொதுமக்கள்‌ புதிய சொத்து வரிவிதிப்புக்‌ கோரும்‌ விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன்‌ மண்டல அலுவலகங்களில்‌ வழங்கலாம் என அறிவிப்பு.



கோவை: கோவையில் இன்று முதல் புதிய சொத்து வரிவிதிப்புக்‌ கோரும்‌ விண்ணப்பங்கள் பெறப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாநகராட்சியில் கடந்த‌ 01.04.2022 முதல்‌ சொத்துவரி தொடர்பான பொதுச்சீராய்வுப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் காரணமாக‌ புதிய சொத்து வரிவிதிப்பு கோரும்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்படாமல்‌ இருந்தது.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சொத்துவரி பொதுச்‌ சீராய்வுப்‌ பணிகள்‌ தற்போது முழுவதுமாக நிறைவுபெற்றது.‌

இந்நிலையில் இன்று (18.10.2022) முதல்‌ பொதுமக்கள்‌ புதிய சொத்து வரிவிதிப்புக்‌ கோரும்‌ விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன்‌ அந்தந்த மண்டல அலுவலகங்களில்‌ வழங்க‌ கேட்டுக்கொள்ளப்பகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...