தீபாவளி பண்டிகைக்காக கூட்ட நெரிசலை குறைக்க தற்காலிக பேருந்து நிலையங்கள், சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்து துறை அறிவிப்பு

தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிங்காநல்லூர், சூலூர், மத்திய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகியவை தற்காலிக பேருந்து நிலையங்களாக செயல்படும் என்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை, சென்னை போன்ற பல்வேறு நகரங்களில் வெளியூர்களில் இருந்து வந்து பணியாற்றும் நபர்கள் தீபாவளியையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் விதமாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்து நிலையங்கள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகம்‌ கோவை கோட்டத்தின்‌ சார்பாக தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க பேருந்து நிலையத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிங்காநல்லூர்‌ பேருந்து நிலையத்தில் இருந்து, மதுரை, தேனி மற்றும்‌ தென்‌ மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

சூலூர்‌ பேருந்து நிலையத்தில் இருந்து கரூர்‌, திருச்சி மார்க்கமாக செல்லும்‌ பேருந்துகள்‌ இயக்கப்படும்.

கோவை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம்‌, திருப்பூர்‌, ஈரோடு, ஆனைகட்டி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்‌ இயக்கப்படும்.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம்‌, சத்தியமங்கலம்‌ மார்க்கமாக செல்லும்‌ பேருந்துகள்‌ இயக்கப்படும்.

இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள், வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை செயல்பட உள்ளன. மேலும்‌ பொது மக்களின்‌ வசதிக்காக பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

கோவை - மதுரை - 100 பேருந்துகள்‌

கோவை - தேனி - 40 பேருந்துகள்‌

கோவை - திருச்சி - 50 பேருந்துகள்‌

கோவை - சேலம்‌ - 50 பேருந்துகள்‌

மேற்கண்ட அனைத்து பேருந்து நிலையங்களுக்கும்‌ காந்திபுரம்‌ நகர பேருந்து நிலையம்‌ மற்றும்‌ உக்கடம்‌ பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள்‌ இயக்கப்படும். எனவே பொதுமக்கள்‌ அனைவரும்‌ இதனை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...