கோவையில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று சமர்பிக்க அக்டோபர் மாதம் வரை அவகாசம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகரில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க ஜூலை மாதத்துடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் மாத இறுதிக்குள் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்க அவகாசத்தை நீட்டித்து மாநகர ஆணையர் பிரதாப் உத்தரவு.


கோவை: ஓய்வூதியதாரா்களுக்கு கடந்த ஜீலை மாதம்‌ முதல்‌ வாழ்நாள்‌ சான்று பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்நாள்‌ சான்று சமர்ப்பிக்க தவறினால்‌ ஓய்வூதியம்‌/ குடும்ப ஓய்வூதியம்‌ நிறுத்தி வைக்கப்படும்‌ என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சியில்‌ 2,549 ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள்‌ ஓய்வூதியம்‌ பெற்று வருகின்றனா்‌. இதுவரை 78% ஓய்வூதியதாராகள்‌ மட்டுமே வாழ்நாள்‌ சான்று வழங்கி உள்ளனர்‌.

எனவே, கோவை மாநகராட்சியில்‌ வாழ்நாள்‌ சான்று சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரா்கள்‌/ குடும்ப ஓய்வூதியதாரர்கள்‌ அக்டோபர்‌ 2022-ம்‌ மாதத்திற்குள்‌ வாழ்நாள்‌ சான்று சமா்ப்பிக்க வேண்டும்‌.

அவ்வாறு சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்கள்‌ / குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம்‌ நவம்பர்‌ 2022-ம்‌ மாதத்திலிருந்து நிறுத்தம்‌ செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...