காந்தி ஜெயந்தி: கோவை மாநகராட்சியில் இறைச்சி கடைகள் செயல்பட தடை

வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகர் பகுதிகளில் உள்ள ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி கோவை மாநகரில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அக்டோபர் 2ஆம் தேதி, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூட வேண்டும்

அன்றைய தினம் கோயம்புத்தூர் மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்தி ரோடு, போத்தனூர் அறுவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது.

மேலும், இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...