ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வோருக்கு தமிழக அரசின் சார்பில் நிதி உதவி


தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்துவர்கள் 2017 பிப்ரவரி முதல் மார்ச் வரை ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசின் சார்பில் நபர் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்:-

1. விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழ்நாட்டில் வசிக்கும் கிறித்துவ மதத்தவராக இருத்தல் வேண்டும். இதற்கான ஆதாரமாக கல்வி நிறுவனம் வழங்கியுள்ள மாற்றுச் சான்றிதழ், வட்டாட்சியர் சான்றிதழ் உள்ளிட்ட ஏதேனும் ஒன்று சமர்பிக்க வேண்டும்.

2. 2017-ம் தேதியில் குறைந்தபட்சம் ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் உடையவராக இருக்க வேண்டும்.

3. வெளிநாடுகளில் புனித பயணம் மேற்கொள்வதற்கு மருத்துவ மற்றும் உடற்தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ்களை பதிவு பெற்ற மருத்துவரிடம் பெற்றிருக்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த மேலும் தகவலுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், முதன்மைச் செயலர்/ மேலாண்மை இயக்குநர், 807, அண்ணாசிலை, சென்னை- 600002 என்ற முகவரியினை அனுகி பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...