நாளை செப் 27, போத்தனூர் தெற்கு பிரிவு, குப்பேபாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை செப்டம்பர் 27ஆம் தேதி போத்தனூர் தெற்கு பிரிவு மற்றும் குப்பேபாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, போத்தனூர் தெற்கு பிரிவு மற்றும் குப்பேபாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை செப் 27 ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போத்தனூர் தெற்கு பிரிவுக்கு உட்பட்ட சீரக் கோனார் நகர், அப்துல் கலாம் நகர், சக்தி பள்ளி பகுதி, சகிரா கார்டன் மற்றும் கல்லாங்காடு புதூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இதேபோல், குப்பேபாளையம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட ஒண்ணிப்பாளையம், சிக்காரம் பாளையம், சென்னி வீர பாளையம், கள்ளப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளி பாளையம், புகழூர் ஒரு பகுதி, வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்தூர்.

வடுகபாளையம், மொண்டி காளி புதூர், ரங்கப்ப கவுண்டன் புதூர், மூணு கட்டியூர் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (27.09.2022) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு குனியமுத்தூர் செயற்பொறியாளர் சுரேஷ் மற்றும் கு. வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...