சமூக சேவையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண்களுக்கான மத்திய அரசின் 'மகளிர் சக்தி விருது' - அக்.31-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் "மகளிர் சக்தி விருது"-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள், www.awards.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.



கோவை: சமூக சேவையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண்களுக்கான மத்திய அரசின் "மகளிர் சக்தி விருது"-க்கு வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்கள் முன்னேற்றத்திற்காக சேவையாற்றிய தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் "மகளிர் சக்தி" விருது வழங்கப்படவுள்ளது.

மகளிருக்கான சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், சட்ட உதவி, விழிப்புணர்வு, கல்வி, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு, பெண் கொடுமை, வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் தலைசிறந்த பங்களிப்பு சேவைபுரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில், "மகளிர் சக்தி விருது" என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு தேர்வாகும் தனிப்பட்ட நபர் மற்றும் நிறுவனங்களுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை, www.awards.gov.in என்ற இணைய தளம் வாயிலாக அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இத்தகவலை, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...