கோவையில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு முகாம் - பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் அழைப்பு..!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்புக்காக வீடு வீடாக சென்று ஆதார் விவரங்களை சேகரிக்கும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க ஆட்சியர் வேண்டுகோள்.


கோவை: கோவை மாவட்டத்தில் நாளைய தினம் (25.09.2022) நடைபெறும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாமுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த பணிக்காக வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் ஆதார் விவரங்களை சேகரிக்கின்றனர்.

இதுவரை, 8 லட்சத்து, 67 ஆயிரம் வாக்காளர்கள், தங்களது ஆதார் எண்ணை, பட்டியலில் இணைத்துள்ளனர். இது, மொத்த வாக்காளர்களில், 28 சதவீதம் மட்டுமே.

மற்ற வாக்காளர்களும், தங்களது ஆதார் எண்ணை, வீடு தேடி வரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கி, இணைப்பு பணிக்கு ஒத்துழைக்க வேண்டும்

இவ்வாறு ஆட்சியர் சமீரன் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...