1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை..!

அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6 முதல் 8ஆம் தேதி வரை ஒன்றிய அளவில் பயிற்சியின் காரணமாக காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு.


சென்னை: அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் காலாண்டு விடுமுறை அக்டோபர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கை கூறியிருப்பதாவது,

தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 6 முதல் 8ஆம் தேதி வரை ஒன்றிய அளவில் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

எனவே அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 8ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அக்டோபர் 6முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வர வேண்டும். இதை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...