செங்கத்துரை, செட்டிபாளையம், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை (செப். 21) மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு...!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கத்துரை, செட்டிபாளையம், சரவணம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நாளைய (21.09.2022) தினம் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள செங்கத்துரை, செட்டிபாளையம், சரவணம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நாளைய (21.09.2022) தினம் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் அருள்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

செங்கதுரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட செங்கதுரை, காடம்பாடி, ஏரோநகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி நகர், மதியழகன் நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கு.வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சரவணம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளகிணறு, உருமாண்டம் பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியம் பாளையம், கே.என்.ஜி புதூர், மணியக்காரன்பாளையம் பகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம், வெள்ளகிணறு, ஹவுசிங் யூனிட்.

செட்டிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராயல் அவென்யூ, எம்ஜிஆர் நகர், ஸ்டார் அவென்யூ, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...