வேளாண் பல்கலை.-யின் வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ செப்.26 முதல் ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி குறித்த 5 நாள் பயிற்சி..!

வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ வரும் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பயிற்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான கட்டணமாக ரூ.11,800 செலுத்த வேண்டும் என அறிவிப்பு.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ வரும் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பயிற்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ வரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 5 நாட்கள்‌ வேளாண்‌ ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பயிற்சி நடைபெறவுள்ளது.

உழவர்கள்‌, பெண்கள்‌, இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள்‌, பட்டதாரிகள்‌, இளைஞர்கள்‌ மற்றும்‌ தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பலருக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. வேளாண்‌ ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும்‌ ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.

வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ வரும் செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கும் இந்த பயிற்சியானது வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள், பயிற்சி கட்டணமாக ரூ,10,000 + (GST ரூ.1,800) என சேர்த்து ரூ.11,800 செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். குறைவான எண்ணிக்கையிலான (20) இடங்கள் மட்டுமே உள்ளது.

பயிற்சி குறித்து கூடுதல் விவரங்களுக்கு 0422 - 6611310, 2500476626 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...