கிணத்துக்கடவு தொகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம்: வரும் செப். 18ம் தேதி நடைபெறும் - தாசில்தார் அறிவிப்பு

கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட மதுக்கரை, குறிச்சி, திருமலையாம்பாளையம், ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு உட்பட ஆறு உள் வட்டங்களில் உள்ள 300 வாக்குச்சாவடிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 18ஆம் தேதி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுக்கரை தாலுகா தாசில்தார் பர்சானா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்குட்பட்ட, மதுக்கரை, குறிச்சி, திருமலையாம்பாளையம், ஒத்தக்கால்மண்டபம், கிணத்துக்கடவு உட்பட ஆறு உள் வட்டங்களில், 300 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை, 9 முதல் மாலை, 5 மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில், வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சமர்ப்பித்து, படிவம் 68-ல் பூர்த்தி செய்து, கையெழுத்திட்டு தர வேண்டும். இந்த முகாமில் 30 தேர்தல் மேற்பார்வையாளர்கள் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...