மத்திய அரசின் பத்ம விருதுகள்: பொதுமக்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://awards.gov.in என்ற முகவரியில் உள்ள தேசிய விருதுகளுக்கான வலைத்தள பக்கத்தில் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


டெல்லி: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்க இன்று (15.09.2022) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்குபத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

பத்ம விருதுகளுக்குவிண்ணப்பிக்க விரும்புபவர்கள்https://awards.gov.inஎன்ற முகவரியில் உள்ள தேசிய விருதுகளுக்கான வலைத்தள பக்கத்தில் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த விருதுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் விருதுகள் மற்றும் பதக்கங்கள் பகுதியிலும், பத்ம விருதுகளுக்கான இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த விருதுகளுக்கான சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்து

https://padmaawards.gov.in/AboutAwards.aspxஎன்ற வலைத்தள பக்கத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அடுத்தாண்டு குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில், பத்ம விருதுகளுக்குவிண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...