கோவை வழியாக செல்லும் 4 விரைவு ரயில்களில் கூடுதலாக 2 ஏ.சி பெட்டிகள் இணைப்பு - ரயில்வே நிர்வாகம் தகவல்.

திருவனந்தபுரம் - மும்பை இடையேயான வாராந்திர விரைவு ரயில் மற்றும் கன்னியாகுமரி - புனே இடையேயான தினசரி விரைவு ரயில் என 4 ரயில்களில் கூடுதலாக 2 ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை: கோவை வழியாக செல்லும் 4 விரைவு ரயில்களில் கூடுதலாக 2 ஏ.சி.பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா பாதிப்பின் காரணமாக, ரயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது கொரோனா முற்றிலும் குறைந்துள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக ரயில்களில், மீண்டும் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் நான்கு ரயில்களில் இரு ஏ.சி., பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும்.

திருவனந்தபுரம் - மும்பை (வண்டி எண்:16332) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும், 17-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

மறுமார்க்கத்தில், மும்பை - திருவனந்தபுரம் (வண்டி எண்:16331) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும், 18ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

இதேபோல், கன்னியாகுமரி - புனே (வண்டி எண்:16382) தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும், புனே - கன்னியாகுமரி(வண்டி எண்:16381) தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் முறையே 22, 23 ஆகிய தேதிகள் முதல், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...